தாய்லாந்து நாட்டின் தெற்கு மாகாணங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 145 ஆக அதிகரித்துள்ளது.
தாய்லாந்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சுமார் 12 மாகாணங்களில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், 12 லட்சம் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி, 36 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 8 மாகாணங்களில் மட்டும் 145 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், அதிகம் பாதிக்கப்பட்ட சோங்க்லா மாகாணத்தில் மட்டும் 110 பேர் பலியாகியுள்ளதாக, தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அங்கு வெள்ள நீர் வடியத் தொடங்கியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பலியானவர்களின் உடல்களை மீட்புப் படையினர் மீட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இத்துடன், வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசித்து வந்த லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும், ஏராளமான மக்கள் தங்குவதற்கு இடமின்றி வீதிகளில் தஞ்சமடைந்துள்ள விடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
முன்னதாக, வியத்நாம், இலங்கை, மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய தென்கிழக்கு ஆசிய நாடுகள் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இலங்கையில் மழை, நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.