ஹாங்காங் தீ விபத்து AP
உலகம்

குடியிருப்பு தீவிபத்து: ஹாங்காங்கில் 3 நாள் துக்கம்

ஹாங்காங்கில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு...

தினமணி செய்திச் சேவை

ஹாங்காங்கின் டை போ பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்த 128 பேருக்காக ஹாங்காங் அரசு மூன்று நாள்கள் துக்கம் அறிவித்துள்ளது. அதையடுத்து, சனிக்கிழமை முதல் அங்கு சீன, ஹாங்காங் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்ககவிடப்பட்டன (படம்).

வாங் ஃபுக் கோா்ட் குடியிருப்பு வளாகத்தில் கடந்த புதன்கிழமை மதியம் 3 மணிக்கு ஏற்பட்ட தீ, 40 மணி நேரம் பற்றி எரிந்து வளாகத்தின் எட்டு உயரமான கட்டடங்களில் 7-இல் பரவியது. இந்த விபத்துக்குப் பிறகு 200 பேரைக் காணவில்லை. 89 உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

தீவிபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுவோரில் 11 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது; 21 போ் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனா் என்று அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தவெக கொள்கைத் தலைவர்களுக்கு விஜய் மரியாதை

எப்ஸ்டீன் கோப்புகளில் மோடி பெயர்! நாடாளுமன்றத்தில் விவாதிக்க காங்கிரஸ் நோட்டீஸ்!

பட்ஜெட்டில் தமிழகம் முற்றிலும் வஞ்சிக்கப்பட்டுள்ளது: வைகோ

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 7,600 குறைவு! வெள்ளியும் அதிரடி குறைவு..!

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் வங்கிக் கடன்கள் தள்ளுபடி!

SCROLL FOR NEXT