பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில், 13 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக, பாகிஸ்தான் ராணுவம் இன்று (அக். 1) அறிவித்துள்ளது.
பலூசிஸ்தானின் தலைநகர் குவேட்டாவில், தடை செய்யப்பட்ட தெஹ்ரிக் - இ - தலிபான் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக வெளியான தகவலின் அடிப்படையில், பாகிஸ்தான் ராணுவம் நடவடிக்கைகள் மேற்கொண்டது.
அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையிலான துப்பாக்கிச் சூட்டில் 10 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், கெச் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளில், 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக, குவேட்டாவில் நேற்று (செப். 30) துணை ராணுவத் தலைமையகத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப் படையின் வெடிகுண்டு தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: டிசம்பர் முதல் வாரத்தில் இந்தியா வருகிறார் விளாதிமீர் புதின்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.