பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், பாஸ்பேட் சுரங்கம் இடிந்து 4 தொழிலாளிகள் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைபர் பக்துன்குவாவின், அபோடாபாத் மாவட்டத்தில், பாஸ்பேட் சுரங்கம் ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்தச் சுரங்கத்தில், நேற்று (செப். 30) வழக்கம்போல் தொழிலாளிகள் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, திடீரென சுரங்கம் இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில், அங்கு பணியில் இருந்த 6 தொழிலாளிகள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர்.
இதையடுத்து, தகவலறிந்து அங்கு விரைந்த மீட்புப் படையினர் சுரங்கத்தில் சிக்கியிருந்த தொழிலாளிகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும், பலியான 3 பேரது உடல்களும் சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்டன. இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மற்றொரு தொழிலாளியும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: பாகிஸ்தானில் 13 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.