நடிகர் ஷாருக்கான்  (கோப்புப் படம்)
உலகம்

ரூ. 12,490 கோடி! உலகத்தின் பணக்கார நடிகரானார் ஷாருக்கான்!

ஹாலிவுட் நடிகர்களை பின்னுக்குத்தள்ளி உலகத்தின் பணக்கார நடிகராக ஷாருக்கான் முன்னேறியுள்ளது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

பாலிவுட் நடிகர் ஷாருக்கான், ரூ.12,490 கோடி சொத்து மதிப்பின் மூலம் உலகத்தின் பணக்கார நடிகராகியுள்ளார்.

எம்3எம் ஹுருன் இந்தியா பணக்காரர்கள் 2025 பட்டியலின்படி, பணக்கார (பில்லியனர்) நடிகர்களில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

சுமார் ரூ.12,490 கோடி (1.4 பில்லியன் அமெரிக்க டாலர்) சொத்து மதிப்பின் மூலம், நடிகர் ஷாருக்கான் பிரபல பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் (1.3 பில்லியன் அமெரிக்க டாலர்) மற்றும் பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் (1.2 பில்லியன் அமெரிக்க டாலர்) ஆகியோரை பணக்காரர் பட்டியலில் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

இந்த நிலையில், 33 ஆண்டுகளுக்கும் மேலாகத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஷாருக்கான், பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ளார். கடந்த 2002 ஆம் ஆண்டு அவர் துவங்கிய “ரெட் சில்லிஸ் என்டர்டெயிமென்ட்” எனும் நிறுவனம் சென்னை எக்ஸ்பிரஸ், ரயீஸ், பதான் போன்ற மாபெரும் வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளது.

நடிகர் ஷாருக்கான் ஐபிஎல் அணிகளில் ஒன்றான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இணை உரிமையாளர் ஆவார். ஐபிஎல் போட்டிகளில் பெரும்பாலும் முன்னிலை வகிக்கும் இந்த அணியானது ஸ்பான்ஸர்ஷிப் ஒப்பந்தங்கள் மற்றும் லீக் வருவாய்களின் மூலம் அதிக வருமாணம் ஈட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

மேலும், மும்பை, அலிபாக் போன்ற நகரங்களிலும்; பிரிட்டன், துபை, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் நடிகர் ஷாருக்கான் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்துள்ளார்.

இத்துடன், சொகுசு வாகனங்கள் மற்றும் லைஃப் ஸ்டைல் பிராண்டுகளிலும் நடிகர் ஷாருக்கான் முதலீடு செய்துள்ளார். இந்த வருமானங்கள் அனைத்தும் அவரது சொத்து மதிப்பை ரூ.12,490 கோடியாக உயர்த்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பட்டியலில், ரூ.7,790 கோடி சொத்து மதிப்பில் நடிகை ஜுஹி சாவ்லா மற்றும் ரூ.2,160 கோடி சொத்து மதிப்பில் நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஆகியோரும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது! 7.50 லட்சம் ஊழியர்கள் பாதிப்பு!

Bollywood actor Shah Rukh Khan has become the world's richest actor with a net worth of Rs 12,490 crore.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்பால் மகிமை... சத்யா தேவராஜன்!

5 ஆண்டுகளுக்கும் நானே முதல்வர்! - சித்தராமையா!

தரக்குறைவாக பதிவிடும் திமுகவினரை கைது செய்யாதது ஏன்? தமிழிசை

“விஜய், விஜய்னு அதயே கேட்டு மக்கள் பிரச்னையை விட்றாதீங்க!” - செல்லூர் ராஜூ

பைசன் புதிய பாடல் அப்டேட்!

SCROLL FOR NEXT