உலகில் பல போர்களை நிறுத்திய தனக்கு நோபல் பரிசு வழங்காவிட்டால் அது அமெரிக்காவையே அவமதிப்பதாகும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் உள்பட உலகில் பல்வேறு போர்களை நிறுத்தியதாகவும் அதற்காக தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்றும் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ராணுவ அதிகாரிகள் முன்பு பேசிய டிரம்ப்,
"இதுவரை 7 போர்களை நான் நிறுத்தியிருக்கிறேன். காஸா - இஸ்ரேல் இடையேயான போரை நிறுத்த திட்டத்தை அறிவித்துள்ளேன். இந்த போர் நிறுத்தப்பட்டால் நான் நிறுத்திய 8 ஆவது போர் இதுவாகும்.
உலகில் 8 சர்வதேச போர்களை முடிவுக்குக் கொண்டு வந்ததற்காக அமைதிக்கான நோபல் பரிசு எனக்கு வழங்குவார்களா? நிச்சயமாக இல்லை. அவர்கள் அப்படி எதுவுமே செய்யாத ஒருவருக்குத்தான் கொடுப்பார்கள்.
எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்காவிட்டால் அது தனது நாட்டிற்கே அவமானம். நான் ஒன்று சொல்கிறேன், எனக்கு அது தேவையில்லை. ஆனால் இந்த நாடு அதைப் பெற வேண்டும் என்று விரும்புகிறேன்.
நோபல் பரிசு கண்டிப்பாக கிடைக்க வேண்டும். ஏனென்றால் அதுபோன்று எதுவும் இல்லை" என்று கூறினார்.
காசா அமைதித் திட்டத்தை டிரம்ப் அறிவித்த ஒரு நாளுக்குப் பிறகு அமைதிக்கான நோபல் பரிசு குறித்து டிரம்ப் இவ்வாறு பேசியுள்ளார்.
இந்த ஆண்டு நோபல் பரிசு அறிவிப்புகள் அக். 10 ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.