வாஷிங்டன்: வெனிசுவேலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ, தனக்குக் கிடைத்த அமைதிக்கான நோபல் பரிசை அமெரிக்க அதிபர் டிரம்பிடம் வழங்கியதாகக் கூறியிருக்கிறார்.
தன்னுடைய நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புப்பை அங்கீகரிக்கும் வகையில், தங்களுடைய சந்திப்பின்போது, அமைதிக்கான நோபல் பரிசை தான் வழங்கியதாக வெனிசுவேலாவின் தலைவா் மரியா கொரினா மச்சாடோவுக்கு (58) தெரிவித்துள்ளார்.
வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ வியாழக்கிழமை தனது அமைதிக்கான நோபல் பரிசு பதக்கத்தை அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு வழங்கியதாகவும் இது நமது நாட்டின் சுதந்திரத்திற்கான அவரது தனிப்பட்ட அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இரு தலைவர்களும் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்கள் முன் பேசியபோது, தனது நோபல் பரிசை டிரம்புக்கு வழங்கியதாக மச்சாடோ கூறியிருந்தார். ஆனால் கூடுதல் விவரங்களுக்கான கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை.
மச்சாடோ வழங்கிய நோபல் பரிசை டிரம்ப் பெற்றுக்கொண்டாரா என்பதை வெள்ளை மாளிகை உடனடியாகத் தெரிவிக்கவில்லை.
ஏற்கனவே, அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் அமைதிக்கான நோபல் பரிசை பகிர்ந்துகொள்ள வெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், தன்னுடைய நாட்டின் எதிர்காலம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப்பை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார் வெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவர். அப்போது, இந்த நோபல் பரிசை வழங்கியதாகக் கூறப்படுகிறது.
தன்னுடைய நாட்டை விட்டு வெளியேறிய மச்சாடோ, தலைமறைவாக இருந்து வந்தார். இருப்பினும், டிரம்புடன் மூடிய கதவுகளுக்குப் பின்னால் ஆலோசனை நடத்திய மச்சாடோ, நுழைவு வாயிலில், தன்னைக் காண வந்திருந்த ஏராளமான ஆதரவாளர்களுக்கு தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
வெனிசுவேலா மீது தாக்குதல்
வெனிசுலாவில் கடந்த 3-ஆம் தேதி அமெரிக்க சிறப்புப் படையினா் நடத்திய அதிரடி தாக்குதல் நடவடிக்கையில் அந்த நாட்டின் அதிபராக இருந்த நிக்கோலஸ் மடூரோவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டனா். ரோட்ரிகஸ் இடைக்கால அதிபரானாா் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.