அதிபர் டொனால்ட் டிரம்ப்  AP
உலகம்

கத்தாரை தாக்கினால் அமெரிக்கா பதிலடி கொடுக்கும்! டிரம்ப்

கத்தாரை தாக்கினால் அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என அறிவிப்பு...

இணையதளச் செய்திப் பிரிவு

கத்தாரை பிற நாடுகள் தாக்கினால், அது அமெரிக்கா மீதான தாக்குதலாக கருதப்பட்டு பதிலடி கொடுக்கப்படும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கத்தாரில் உள்ள ஹமாஸ் தலைமையகத்தின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை கடந்த மாதம் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு உலகளவில் கண்டனம் எழுந்தன.

இந்த நிலையில், அமெரிக்க பயணம் மேற்கொண்டிருந்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடன், கத்தார் தாக்குதல் விவகாரம் குறித்து டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

அப்போது, கத்தார் பிரதமர் ஷேக் முகம்மது பின் அப்துல் ரஹ்மான் அல் தானியுடன் நெதன்யாகுவை தொலைப்பேசியில் டிரம்ப் பேசவைத்தார். நெதன்யாகுவும் தாக்குதலுக்கு கத்தார் பிரதமரிடம் மன்னிப்புக் கோரினார்.

தற்போது நேட்டோ கூட்டமைப்பை போன்ற ஒரு பாதுகாப்பு உத்தரவாதத்தை கத்தாருக்கு டிரம்ப் அளித்துள்ளார்.

கத்தாரின் பிராந்தியங்கள், இறையாண்மை, உள்கட்டமைப்புகள் மீது எந்த நாடு தாக்குதல் நடத்தினாலும், அது அமெரிக்கா மீதான தாக்குதலாக கருதப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அத்தகைய தாக்குதல் நடத்தினால், கத்தாரில் ஸ்திரித்தன்மை மற்றும் அமைதி திரும்புவதற்காக தூதரக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் தேவைப்பட்டால் ராணுவ ரீதியிலும் அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான நிர்வாக உத்தரவிலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டிருப்பதாக வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

US will retaliate if Qatar is attacked! Trump

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனவு தேவதையே... அஞ்சனா ரங்கன்!

பாஜகவை எதிரி என்று சொல்லும் விஜய், எப்படி அதன்பிடியில் இருப்பார்? நயினார் நாகேந்திரன்

இந்தியாவுக்கு வருவதில் கௌரவம்: மெஸ்ஸி

குஜராத் எல்லையில் பாகிஸ்தான் ராணுவ கட்டமைப்பு அதிகரிப்பு! ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

வாட்ஸ்ஆப் vs அரட்டை! அதீத வரவேற்பைப் பெறுகிறது! முதலிடம்!!

SCROLL FOR NEXT