இந்தோனேசியாவில் பள்ளிக் கட்டடம் இடிந்த விபத்தில் உயிரிழப்பு 14-ஆக உயர்ந்துள்ளது.
இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவாவிலுள்ள சிடோர்ஜோ பகுதியில் கடந்த திங்கள்கிழமை பள்ளிக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் பள்ளியில் இருந்த ஏராளமான குழந்தைகளின் கதி என்ன ஆனது என்பது தெரியவில்லை.
சனிக்கிழமை(அக். 4) நிலவரப்படி, கட்டட விபத்தில் சிக்கியவர்களில் 14 பேரில் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். தொடர்ந்து, முழுவீச்சில் மீட்புப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விபத்தில் மாயமான மேலும் 49 பேரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், விபத்து நடந்ததிலிருந்து அடுத்த 72 மணி நேரம்(கோல்டன் ஹவர்ஸ்)-க்குப் பின், இடிபாடுகளில் சிக்கியவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பு என்பது மிகக் குறைவே என்பதால், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தார் தரப்பிலிருந்து சம்மதம் பெறப்பட்டதைத்தொடர்ந்து, சேதமடைந்த கட்டட இடிபாடுகளைக் களைந்து உடல்களைத் தேடி மீட்கும் பணிக்காக ராட்சஷ இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.