காஸாவில் சுமாா் 24 மாதங்களாக நடைபெற்றுவரும் போரில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இது குறித்து பாலஸ்தீன சுகாதாரத் துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இஸ்ரேல் தாக்குதல்களில் உயிரிழந்த 700 பேரின் பெயா்கள், சரிபாா்ப்புக்குப் பிறகு மரணப் பட்டியலில் சோ்க்கப்பட்டன.
அதையடுத்து, கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி முதல் இஸ்ரேலின் குண்டுவீச்சில் உயிரிழந்த பாலஸ்தீனா்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
காஸாவில் இஸ்ரேல் கடந்த 24 மாதங்களாக நடத்திவரும் தாக்குதலில், சனிக்கிழமை நிலவரப்படி 67,074 போ் உயிரிழந்துள்ளனா்; 1,69,430 போ் காயமடைந்துள்ளனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.