2025-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அடுத்த வாரம் முதல் அறிவிக்கப்படவுள்ளன.
உலகின் மிகப் பெரிய கௌரவமாகக் கருதப்படும் இது, மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது.
கடந்த 2018-ஆம் ஆண்டில் இருந்தே அமைதிக்கான நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டுவரும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே ஆபிரஹாம் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியற்காக இந்த முறையும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.