பிறப்பால் குடியுரிமையை ரத்து செய்யும் அரசாணையை செய்தியாளா்களிடம் காட்டிய டொனால்ட் டிரம்ப். 
உலகம்

பிறப்பால் குடியுரிமையை ரத்து செய்ய முடியாது: அமெரிக்க நீதிமன்றம்

பிறப்பால் குடியுரிமையை டிரம்ப் நிர்வாகம் ரத்து செய்ய முடியாது என்று அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு.

இணையதளச் செய்திப் பிரிவு

பாஸ்டன்: அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு, பிறப்பால் குடியுரிமையை வழங்குவதை, அதிபர் டிரம்ப் நிர்வாகம் முடிவுக்குக் கொண்டுவர முடியாது என்று ஃபெடரல் மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாஸ்டனில் உள்ள ஒரு ஃபெடரல் மேல்முறையீட்டு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இந்த பரபரப்புத் தீர்ப்பை அளித்துள்ளது.

நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் உத்தரவில், அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம், நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கோ அல்லது தற்காலிகமாக தங்கியிருப்பவர்களுக்கோ பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமையை ரத்து செய்ய முடியாது என்று குறிப்பிட்டுள்ளது.

இது அமெரிக்க அதிபரின் பிறப்பால் குடியுரிமையை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவுக்கு மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.

அமெரிக்க சட்டம், 14வது திருத்தத்தின்படி, குடியுரிமைப் பிரிவின் கீழ் விவரிக்கப்பட்டுள்ள, அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகள் பிறப்பால் குடியுரிமைக்கு உரிமையுடையவர்கள் என்ற வாதத்தின் கூற்றினை ஏற்று, அந்த உரிமையை வழங்குவதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவில், பிறப்பால் குடியுரிமை ரத்து செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டதை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டன. இது தொடர்பாக, அமெரிக்க கீழ் நீதிமன்றங்கள் பிறப்பித்த தடை உத்தரவுகளை ஃபெடரல் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு உறுதி செய்திருக்கிறது.

"கடந்தகால வரலாற்று படிப்பினைகள்", பிறப்புரிமை குடியுரிமையை அங்கீகரிப்பதற்கான, நமது நாட்டில் ஏற்கனவே இருக்கும் மரபுகளை உடைத்து, குடியுரிமை என்பது ஒரு குழந்தையைப் பெற்றெடுத்த பெற்றோரின் செயல்களை அடிப்படையாக வைத்து முடிவு செய்வது என்ற வகையில் மாற்றுவதற்கான அண்மைக்கால முயற்சிகள் குறித்து எச்சரிக்கை உணர்வுடன் இருப்பதற்கு அனைத்து காரணங்களையும் வழங்குகிறது.

ஆனால், மிக அரிதான சூழ்நிலை என்னவென்றால் - ஒருவர் அமெரிக்காவில் பிறந்தார் என்ற எளிய உண்மை ஒன்றுதான் அந்த உரிமையை வழங்குகிறது என்று நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

A federal appeals court in Boston ruled on Friday that the Trump administration cannot withhold citizenship from children born to people in the country illegally or temporarily, adding to the mounting legal setbacks for the president's birthright order.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வண்ணப் புறா... சாக்‌ஷி அகர்வால்!

தங்கப் பதுமை... அனுபமா பரமேஸ்வரன்!

அவசியம் என்றால் விஜய்யை கைது செய்வோம்: துரைமுருகன்

ரஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணம் எப்போது?

காத்மாண்டுவில் கனமழை: 3 நாள்களுக்கு வாகனப் போக்குவரத்துக்குத் தடை!

SCROLL FOR NEXT