அமெரிக்காவில் இருந்து கொழும்பு சென்ற கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் அசைவ உணவு சாப்பிட்ட ஓய்வுபெற்ற மருத்துவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் ஓய்வுபெற்ற இருதய நிபுணரான அசோகா ஜெயவீரா (85) என்பவர், 2023 ஜூன் 30-ல் லாஸ் ஏஞ்சலீஸில் இருந்து இலங்கையின் கொழும்பு-க்கு கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் சென்றார்.
இந்த பயணத்தின்போது, அவர் சாப்பிட சைவ உணவு கோரினார். ஆனால், சைவ உணவு இல்லையென்றும், அசைவ உணவு தருவதாகவும் விமானப் பணியாளர்கள் தெரிவித்தனர். இருப்பினும், தனக்கு சைவ உணவு வேண்டும் என்று அசோகா முன்கூட்டியே கூறியிருந்தார்.
இருப்பினும், அவருக்கு இறைச்சியுடன் கூடிய அசைவ உணவே வழங்கப்பட்டு, உணவில் இறைச்சி அல்லாத சுற்றியுள்ளவற்றை சாப்பிடுமாறு விமானப் பணியாளர்கள் அறிவுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, உணவை அசோகா சாப்பிட முற்பட்டபோது, அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, சுயநினைவை இழந்தார். இதனையடுத்து, ஸ்காட்லாந்தில் விமானம் தரையிறக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், சில நாள்களிலேயே சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்த நிலையில், கத்தார் ஏர்வேஸ் மீது அசோகாவின் மகன் வழக்குப்பதிவு செய்தார். முன்கூட்டியே ஆர்டர் செய்யப்பட்ட சைவ உணவு வழங்கவில்லை என்றும், மருத்துவ சிகிச்சையில் முறையான பதிலளிக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், இழப்பீடாக 1,28,821 டாலர் வழங்க வேண்டும் என்றும் அவர் கோரினார். இருப்பினும், இது குறைந்தபட்ச தொகையே. ஏனெனில், விமானத்தில் இறப்பு அல்லது காயமடைந்தோருக்கு சுமார் 1,75,000 டாலர் வரையில் வழங்கப்படுகிறது
இந்த சம்பவம், உணவுக் கட்டுபாடு மற்றும் பயணியர் சேவை - குறிப்பாக வயதான பயணிகளுக்கான விமான சேவை குறித்து கேள்விகளை எழுப்புகிறது.
இதையும் படிக்க: கையில் துப்பாக்கியுடன் நின்றிருந்த தலிபான்! இந்தியர் என்றதும் கிடைத்த மரியாதை! வைரல் விடியோ
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.