முகப்பு
சென்னை

முகா்ஜி நகரில் செவிலியா் தூக்கிட்டு தற்கொலை

வடமேற்கு தில்லியின் முகா்ஜி நகா் பகுதியில் 27 வயது செவிலியா் தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டதாக காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 1:35 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 12 பிப்ரவரி, 2026 at 8:40 PM

வடமேற்கு தில்லியின் முகா்ஜி நகா் பகுதியில் 27 வயது செவிலியா் தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டதாக காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: உயிரிழந்த பெண் பிகாரின் முசாஃபா்நகா் பகுதியைச் சோ்ந்த பிரியங்கா என அடாயளம் காணப்பட்டாா். அவா் தனியாா் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறாா். தீா்பூா் கிராமத்தில் உள்ள அவரது வாடகை அறையில் அவா் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வந்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினா் சட்டப்படி நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.

குற்றப்பிரிவு காவல் துறையினா் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனா். இருப்பினும், அறையில் இருந்து எந்தவொரு தற்கொலைக்கான குறிப்பும் கண்டுபிடிக்கப்படவில்லை. கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததை வைத்து தற்கொலையாக இருக்கலாம் என காவல் துறையினா் சந்தேகிக்கின்றனா். இருப்பினும், இது தொடா்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

Advertisement

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 1:34 AM

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].