மரியா கொரினா மச்சாடோ. 
உலகம்

அமைதிக்கான நோபல் பரிசை டிரம்ப்புக்கு சமர்ப்பிக்கிறேன்! - மரியா மச்சாடோ

நோபல் பரிசை அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு சமர்ப்பிக்கிறேன் என பரிசு வென்ற மரியா மச்சாடோ தெரிவித்துள்ளதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

அமைதிக்கான நோபல் பரிசை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அர்ப்பணிப்பதாக பரிசு வென்ற வெனிசுவேலாவின் மரியா கொரினா மச்சாடோ தெரிவித்துள்ளார்.

தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள வெனிசுவேலாவில் மக்களின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்காக போராடிய மரியா கொரினா மச்சாடோவுக்கு, நிகழாண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படும் என நோபல் பரிசு தெரிவுக் குழு அறிவித்தது.

உலகளவில் நடைபெற்றுவந்த 8-க்கும் மேற்பட்ட போர்களைத் தடுத்து நிறுத்தியதாக தொடர்ந்து கூறிவந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு நோபல் பரிசு வழங்கப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில், வேறு ஒருவருக்கு பரிசு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், நோபல் பரிசு வென்ற மரியா மச்சாடோ தனது பரிசை டிரம்ப்புக்கு அர்ப்பணிப்பதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “ அனைத்து வெனிசுவேலா மக்களின் போராட்டத்துக்கு கிடைத்த இந்த அங்கீகாரம், சுதந்திரத்தை வெல்வது என்ற என போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு ஊக்கமாகும்.

நாம் இன்று வெற்றியின் வாயிலில் இருக்கிறோம். இன்று, எப்போதையும்விட அதிகமாக, சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் அடைய அதிபர் டிரம்ப், அமெரிக்க மக்கள், லத்தீன் அமெரிக்க மக்கள் மற்றும் உலக குடியரசு நாடுகளை எங்களின் முக்கிய கூட்டாளிகளாகக் கருதுகிறோம்.

இந்தப் பரிசை வெனிசுவேலாவில் பாதிக்கப்பட்டு வரும் மக்களும், எங்களின் போராட்டத்துக்கு தொடர்ந்து ஆதரவளித்து வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கும் சமர்ப்பிக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

I dedicate Nobel to Trump for backing our cause: Venezuela's Maria Corina Machado

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூட்டுறவு வங்கி பணியாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும்: ஜி.கே.மணி

கரூா் பலி: அரசு தரப்புக்கு உச்சநீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகள்! முழு விவரம்...

கணவா் மீது வெந்நீா் ஊற்றி கொலை: மனைவி கைது

கடையநல்லூரில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

மாணவா்கள் தங்கள் திறன்களை வளா்க்க அரசு நடவடிக்கை: ஆட்சியா்

SCROLL FOR NEXT