டெக்சாஸ் மாகாணத்தில் நின்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது விமானம் விழுந்து தீப்பிடித்து எரிந்தது.
இந்த விபத்தில் 18 சக்கர டிரக் மற்றும் பல வாகனங்கள் மீது விமானம் மோதியதில், மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டு இருவர் பலியாகியுள்ளனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹிக்ஸ் விமான நிலையம் அருகே சிறிய ரக விமானம் ஒன்று, சாலையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 18 சக்கர டிரக் மீது ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் (உள்ளூர் நேரப்படி) விழுந்துள்ளது.
விமானம் விழுந்தவுடன் தீப்பற்றியதில், அப்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பல டிரக்குகள் முழுமையாக சேதமடைந்தது. தொடர்ந்து அருகிலிருந்த கார் உள்ளிட்ட வாகனங்கள் மீதும் தீப்பரவி எறியத் தொடங்கியுள்ளது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புப் படையினர் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் எரிந்த நிலையில் இருவரின் உடல்களை மீட்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர். மேலும், காயமடைந்தவர்கள் விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
இந்த விபத்து குறித்து அமெரிக்க விமானப் போக்குவரத்துத் துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.