உலகம்

4-ஆவது விமானந்தாங்கி கப்பலைக் கட்டும் சீனா

சீனா தனது நான்காவது விமானந்தாங்கிக் கப்பலை கட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திச் சேவை

சீனா தனது நான்காவது விமானந்தாங்கிக் கப்பலை கட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து ஹாங்காங்கில் இருந்து வெளியாகும் சவுத் சீனா மார்னிங் போஸ்ட் நாளிதழ் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

லியோனிங் மாகாணத்தின் டாலியன் கப்பல் கட்டுமான தளத்தில் சீனாவின் நான்காவது விமானந்தாங்கிக் கப்பல் கட்டப்பட்டு வருகிறது.

ராணுவ வலிமை மிக்க நாடுகளிலேயே விமானந்தாங்கிக் கப்பல்களை கடைசியாக தனது கடற்படையில் சேர்க்கத் தொடங்கிய சீனாவிடம் தற்போது இரண்டு கப்பல்கள் உள்ளன. மூன்றாவது விமானந்தாங்கிக் கப்பலான ஃபுஜியான் வெற்றிகரமாக சோதனைகள் மற்றும் பயிற்சிகளை நடத்தியுள்ளது. விரைவில் அது கடற்படையில் இணைக்கப்படும். இந்த மூன்று கப்பல்களும் பாரம்பரியமான எரிபொருள்களில் இயங்கக்கூடியவை.

ஆனால், நான்காவதாக தற்போது கட்டப்பட்டுவரும் விமானந்தாங்கிக் கப்பல் அணுசக்தியில் இயங்கும் வகையில் அமைக்கப்படுவதாகத் தெரிகிறது. அது அந்தக் கப்பலின் தாக்குதல்

எல்லையை விரிவுபடுத்தி, மேம்பட்ட சாதனங்களை இயக்குவதற்கு வழிவகுக்கும் என்று அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வான தேவதை... அகான்ஷா சிங்!

கொட்டு முழக்கோடு கட்டழகு மேனி... ரியா சக்கரவர்த்தி!

மெஸ்ஸி புதிய உலக சாதனை..! ஆர்ஜென்டீனா அபார வெற்றி!

தேவர்கள் வளர்த்திடும் காவிய யாகம்... பலக் திவாரி!

பூண்டி ஏரி நிரம்பியது! மதகுகளில் உபரி நீர் திறப்பு!

SCROLL FOR NEXT