போலந்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள கோழி பண்ணையில் ஏற்பட்ட தீவிபத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கோழிகள் கருகின.
இதுகுறித்து உள்ளூா் அதிகாரிகள் கூறுகையில், ஃபால்கோவிசே கிராமத்தில் ஆயிரக்கணக்கான கோழிகள் அடைக்கப்பட்டிருந்த கட்டடத்தில் ஏற்பட்ட இந்தத் தீயை அணைப்பதில் 10 மணி நேரம் ஆனதாகவும் அந்தக் கோழி பண்ணையில் சுமாா் 1.3 லட்சம் கோழிகள் வளா்க்கப்பட்டதாகவும் தெரிவித்தனா்.
உயிரிழந்த கோழிகளின் எண்ணிக்கை 4 லட்சம் வரை இருக்கலாம் என்றும் சில ஊடகங்கள் தெரிவித்தன. விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை தகவல் இல்லை.