பாகிஸ்தானின் கடன் சுமை ரூ. 25 லட்சம் கோடிக்கும் மேல் உயர்ந்துள்ளது. 2025-ஆம் நிதியாண்டில் அந்நாட்டின் கடன் சுமையானது பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 80.6 ட்ரில்லியனாக (286.832 பில்லியன் டாலர், அதாவது 28.68 ஆயிரம் கோடி டாலர்) உயர்ந்துள்ளது. இது, அதற்கு முந்தைய நிதியாண்டைவிட(2024) 13 மடங்கு அதிகம் என்பதை அதிகாரபூர்வ தரவுகள் வெளிக்காட்டுகின்றன.
2024-25-ஆம் ஆண்டு அந்நாட்டில் நடத்தப்பட்ட பொருளாதார ஆய்வின்படி பாகிஸ்தானின் கடன் அந்நாட்டு ரூபாய் மதிப்பில் 76,000 பில்லியனாக (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.23 லட்சம் கோடி) இருந்த நிலையில், அந்நாட்டு ரூபாய் மதிப்பில் 80,600 பில்லியனாக (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.25 லட்சம் கோடிக்கும் மேல்) உயர்ந்துள்ளது. இதில் மூன்றில் ஒரு பகுதி வெளிநாடுகளில் பெற்ற கடனாகும்.
2025-ஆம் நிதியாண்டின் கடந்த மாதத்துக்கான வருடாந்திர கடன் சீராய்வு அறிக்கையை பாகிஸ்தானின் நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், பாகிஸ்தானின் உள்நாட்டுக் கடன் 15 சதவீதம் உயர்ந்து பாகிஸ்தான் ரூபாயில் 54.5 ட்ரில்லியனாகவும், அதேபோல, வெளிக் கடன் 6 சதவீதம் உயர்ந்து பாகிஸ்தான் ரூபாயில் 26.0 ட்ரில்லியனாகவும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025-ஆம் நிதியாண்டில், உள்நாட்டு வளர்ச்சியைக் குறிக்கும் ஜிடிபியில் வளர்ச்சியானது எதிர்பார்ப்பைவிடக் குறைந்ததே இதற்கான முக்கியக் காரணமாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.