கென்யா நாட்டின் கடலோர மாகாணத்தில், 12 பயணிகளுடன் சென்ற சிறிய ரக விமானம் கீழே விழுந்து நொறுங்கியதாகக் கூறப்பட்டுள்ளது.
கென்யாவின் குவாலே மாகாணத்தில் இருந்து மசாய் மரா தேசிய சரணாலயத்தை நோக்கி, இன்று (அக். 28) காலை 12 பயணிகளுடன் சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றுள்ளது.
இந்த விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கட்டுப்பாட்டு மையத்துடனான அதன் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. டயானி விமான ஓடுதளத்தில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் மலைகள் மற்றும் காடுகள் நிரம்பிய பகுதியில், விமானம் விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்தில், விமானம் மலையில் மோதி கீழே விழுந்து நொறுங்கியதாகக் கூறப்படும் நிலையில், விமானத்தில் பயணித்த 12 பேர் பலியாகியிருக்கக் கூடும் என அஞ்சப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து, கென்ய அதிகாரிகள் விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், 12 பயணிகளின் நிலைக் குறித்து எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
இதையும் படிக்க: ஜப்பானின் முதல் பெண் பிரதமருடன் அதிபர் டிரம்ப் சந்திப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.