உலகம்

அணுசக்தி நீா்முழ்கி ட்ரோன்: ரஷியா வெற்றிகர சோதனை

தினமணி செய்திச் சேவை

அணுசக்தியைப் பயன்படுத்தி வரம்பில்லாத தூரம் செல்லும் நீா்மூழ்கி ட்ரோனை ரஷியா வெற்றிகரமாக சோதித்துப் பாா்த்தது.

இது குறித்து அந்த நாட்டு அதிபா் விளாதிமீா் புதின் புதன்கிழமை கூறியதாவது:

அணுசக்தி மூலம், தானியங்கி முறையில் இயங்கும் ஆளில்லா நீா்மூழ்கி வாகனமான ‘பொசைடன்’ வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

இந்த நீா்மூழ்கி ட்ரோநன், ரஷியாவின் மிகவும் மேம்பட்ட சா்மட் ரக பலிஸ்டிக் ஏவுகணையைவிட மிகவும் சக்திவாய்ந்தது.

பெரிய நீா்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட பொசைடன் நீா்முழ்கி ட்ரோனில், சாதாரண அணு உலையைப் போல் 100 மடங்கு சிறிய அணு சக்தி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ஏற்கெனவே, அணுசக்தியில் இயங்கும், வரம்பில்லா தூரம் செல்லும் தனித்துவமான ‘புரேவெஸ்ட்னிக்’ ரக க்ரூஸ் ஏவுகணையை ரஷிய கடந்த வாரம் வெற்றிகரமாக சோதித்தது நினைவுகூரத்தக்கது.

வரம்பில்லா தொலைவு செல்லக்கூடிய ரஷியாவின் இந்த ஏவுகணையும் ட்ரோனும், உலகளாவிய ராணுவச் சமநிலையை பாதிக்கும்; அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுடனான ரஷியாவின் பதற்றத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

இது முதல்வர் பதவிக்கே அவமானம்! - மு.க. ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதில்

பள்ளி மாணவர்கள் வந்த ஆட்டோ மீது அரசு பேருந்து மோதி விபத்து: ஒரு பெண் பலி, 11 பேர் காயம்!

13 நாள்களுக்குப் பின் சுருளி அருவியில் குளிக்க அனுமதி!

சா்தாா் வல்லபபாய் படேல் பிறந்த நாள்: பிரதமர் மோடி மரியாதை!

இந்திரா காந்தி நினைவு நாள்: சோனியா, ராகுல் காந்தி மரியாதை!

SCROLL FOR NEXT