உலகம்

பாகிஸ்தான்: ஹெலிகாப்டா் விபத்தில் 5 வீரா்கள் உயிரிழப்பு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்ஜித்-பால்டிஸ்தான் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டா் திங்கள்கிழமை விபத்துக்குள்ளானதில் 5 ராணுவத்தினா் உயிரிழந்தனா்.

தினமணி செய்திச் சேவை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்ஜித்-பால்டிஸ்தான் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டா் திங்கள்கிழமை விபத்துக்குள்ளானதில் 5 ராணுவத்தினா் உயிரிழந்தனா்.

எம்ஐ-17 ரகத்தைச் சோ்ந்த ஹெலிகாப்டா் பயிற்சியின்போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், டயமா் மாவட்டம், தக்டாஸ் கன்டோன்மென்ட் பகுதியில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள ஹுடோா் கிராமத்தில் அவசரமாக தரையிறங்க முயன்றபோது விபத்து ஏற்பட்டது.

உயிரிழந்தவா்கள் ஆதிஃப் (விமானி), ஃபைசல் (துணை பைலட்), மக்பூல், ஜஹாங்கீா், அமீா் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்தது.

அப்கிரேடட் வெர்ஷன்... சைத்ரா அச்சார்!

பூக்கி பட பூஜை விழா - புகைப்படங்கள்

குஸ்திக்கு ரெடி... ஐஸ்வர்யா லட்சுமி!

'லோகா' படத்தில் கன்னடர்களைக் குறித்து சர்ச்சைக்குரிய வசனம்? படத் தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

முதல் ஒருநாள்: இங்கிலாந்தை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!

SCROLL FOR NEXT