புர்கினா பஸோவின் இடைக்கால அதிபர் இப்ராஹிம் தரோரே ஏபி
உலகம்

புர்கினா பஸோவில் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்குத் தடை!

புர்கினா பஸோவில் தன்பாலின ஈர்ப்புக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பஸோவில், தன்பாலின சேர்க்கைக்குத் தடை விதிக்கும் புதிய சட்டமானது, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

புர்கினா பஸோ நாட்டில், கேப்டன் இப்ராஹிம் தரோரே தலைமையிலான ராணுவ அரசு, கடந்த ஓராண்டுக்கும் மேலாகத் தன்பாலின ஈர்ப்புக்குத் தடை விதித்திருந்தது.

இந்நிலையில், தன்பாலின ஈர்ப்புக்குத் தடை விதிக்கும் புதிய திருத்தச் சட்டமானது, அந்நாட்டு நீதிமன்றத்தில், நேற்று (செப்.1) ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய சட்டமானது, உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை மீறி ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவோருக்கு, 2 முதல் 5 ஆண்டுகள் வரையில் சிறைத் தண்டனை மற்றும் அபராதங்கள் விதிக்கப்படக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, புர்கினா பஸோ உள்ளிட்ட 54 ஆப்பிரிக்க நாடுகள், தன்பாலின சேர்கைக்குத் தடை விதித்துள்ளன. அங்குள்ள, சில நாடுகளில் அக்குற்றத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனையும் விதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளின், இந்தச் சட்டத்துக்கு மேற்குலக நாடுகள் கடும் கண்டனங்களுக்கு, தன்பாலின ஈர்ப்பானது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பழக்கம், அவை பாலின நோக்குநிலை அல்ல என ஆப்பிரிக்க அரசுகள் விமர்சித்துள்ளன.

கடந்த 2022-ம் ஆண்டு ராணுவப் புரட்சியினால் புர்கினா பஸோவின் அதிபரான கேப்டன் இப்ராஹிம் தரோரே, வெளிநாடுகளின் ஆதிக்கத்துக்கு எதிராக, பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். இதனால், அவருக்கு ஆப்பிரிக்காவில் இளம் தலைமுறையினரின் ஆதரவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் பெல்ஜியம்! இஸ்ரேலிய அமைச்சர்கள் மீது தடை!

In the West African country of Burkina Faso, a new law banning homosexuality has been passed by the country's parliament.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருத்துவ சிகிச்சை தொகை வழங்க மறுப்பு: காப்பீட்டு நிறுவனத்துக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம்

கைலாசநாதா் கோயிலில் சிவன் பிட்டுக்கு மண் சுமந்த உற்சவம்

புதுவையில் நிலவும் பிரச்னைகளை தீா்க்க ஆளுநா் தலையிட வலியுறுத்தல்

மூணாறு தலைப்பு அணைக்கு செல்லும் சாலை புதுப்பிக்கப்படுமா?

நீடாமங்கலம் ரயில் நிலையம் நவீனமயமாக்கப்படுமா?

SCROLL FOR NEXT