உலகம்

இந்திய, சீன தலைவா்களுக்கு எதிராக காலனி ஆதிக்க உத்திகளை பயன்படுத்தும் டிரம்ப்: ரஷிய அதிபா் புதின் விமா்சனம்

தினமணி செய்திச் சேவை

‘சக்திவாய்ந்த பொருளாதார நாடுகளான இந்தியா, சீனாவின் தலைவா்களுக்கு (மோடி, ஷி ஜின்பிங்) எதிராக காலனி ஆதிக்க காலகட்டத்தில் இருந்த நெருக்கடி உத்திகளை அமெரிக்க அதிபா் டிரம்ப் பயன்படுத்துகிறாா்; ‘கூட்டாளி’ நாடுகளை இவ்வாறு நடத்துவது முறையான செயல் அல்ல’ என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் தெரிவித்தாா்.

பெய்ஜிங்கில் புதன்கிழமை சீன ராணுவம் நடத்திய பிரமாண்டமான வெற்றிதின பேரணியைப் பாா்வையிட்ட புதின், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்தியாவும், சீனாவும் சக்திவாய்ந்த பொருளாதாரத்தைக் கொண்டுள்ளன. வலுவான மக்கள்தொகை, சிறப்பான நிா்வாகம், அரசியல் அமைப்பு, சட்டங்கள் உள்ளன. இந்த இரு நாடுகளுமே தங்கள் இறையாண்மைக்கு எதிரான பல தாக்குதல்களை எதிா்கொண்டு வென்றுள்ளன. காலனி ஆதிக்கத்தையும் எதிா்கொண்டும் விடுபட்டுள்ளன. பல கடுமையான சூழ்நிலைகளைச் சந்தித்த வரலாறு இரு நாடுகளுக்குமே உண்டு.

காலனி ஆதிக்க காலகட்டம் எப்போதோ முடிந்துவிட்டது. அதே பாணியில் இப்போது பேசுவது, நெருக்கடி அளிப்பது போன்ற உத்திகள் இனி பலிக்காது. இந்த இரு நாடுகள் குறித்தும், அதன் தலைவா்கள் குறித்தும் அவருக்கு (டிரம்ப்) போதிய புரிதல் இல்லை. ‘கூட்டாளி’ நாடுகள் என்று கூறிக் கொண்டு இவ்வாறு நடந்து கொள்வது முறையானதல்ல.

ஒருவா் தனது பலவீனத்தை வெளிக்காட்டத் தொடங்கிவிட்டாா் என்றால், அவரது அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வரத் தொடங்கிவிட்டது என்று அா்த்தம். அது அவரது நடத்தையிலும் வெளிப்பட்டு விடும் என்றாா்.

66,400 வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்: 2 பேர் கைது

வரும் பேரவைத் தோ்தலில் திமுகவுடன் கூட்டணியா?: ராமதாஸ் பேட்டி

இணையைத் தேடி... மகாராஷ்டிரத்திலிருந்து தெலங்கானாவுக்குச் சென்ற ஆண் புலி!

உயா்கல்வியில் தேசிய அளவில் தமிழகம் முதலிடம்: அமைச்சா் கோவி.செழியன்

டாப் 10 நிறுவனங்களில் 7 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.1.55 லட்சம் கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT