கீவ் நகரில் தரைமட்டமான கட்டடம் AP
உலகம்

உக்ரைன் - ரஷியா சண்டைக்கு விரைவில் முடிவு: பிரதமர் மோடியுடன் பிரான்ஸ் அதிபர் பேச்சு!

உக்ரைன் விவகாரம்: பிரதமர் மோடியுடன் பிரான்ஸ் அதிபர் பேச்சு!

இணையதளச் செய்திப் பிரிவு

உக்ரைன் - ரஷியா சண்டைக்கு விரைவில் முடிவு எட்டப்படும் என்று பிரான்ஸ் அதிபருடனான தொலைபேசி உரையாடலுக்குப் பின், பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

கடந்த மூன்றாண்டுகளைக் கடந்தும் நீடிக்கும் உக்ரைன் மீதான ரஷியாவின் போரால் எரிபொருள் விலை உயா்வு உள்பட பல்வேறு பின்விளைவுகள் ஏற்பட்டுள்ளன. அவை உலகை பெரிதும் பாதிக்கின்றன. குறிப்பாக தெற்குலக நாடுகள் பாதிக்கப்படுகின்றன என்ற கருத்தை ஐ.நா. பொதுச் சபை விவாதத்தில் இந்தியா முன் வைத்தது. இந்த நிலையில், உக்ரைன் போரை விரைந்து முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் குறித்து இந்தியா - பிரான்ஸ் தலைவர்கள் இன்று(செப். 6) தொலைபேசி வழியாக விவாதித்துள்ளனர்.

இது குறித்து பிரதமர் மோடி தமது எக்ஸ் தளப் பக்கத்தில் இன்று(செப். 6) பதிவிட்டுள்ளதாவது: “பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு மேம்பாடு குறித்து நாங்கள் இருவரும் ஆராய்ந்தோம். மேலும், சர்வதேச, பிராந்திய பிரச்சினைகளைப் பற்றியும் விவாதித்தோம்.

அதிலும் குறிப்பக, உக்ரைனில் நீடிக்கும் சண்டைக்கு விரைவில் முடிவு எட்ட மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் குறித்து கருத்து பரிமாற்றம் நடத்தப்பட்டது.

இந்தியா- பிரான்ஸ் இடையேயான பங்களிப்பானது, உலகளாவிய அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு முக்கிய பங்காற்றும்” என்றார்.

PM Narendra Modi speaks to French President Macron - Exchanged views on international and regional issues, including efforts for bringing an early end to the conflict in Ukraine.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘ஸ்டாலின் தொடரட்டும்; தமிழகம் வெல்லட்டும்’ பெயரில் திருச்சியில் திமுக மாநில மாநாடு!

மகளிர் பிரீமியர் லீக்: மும்பைக்கு எதிராக தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு!

திமுக மாவட்டச் செயலர்கள் ஆலோசனைக் கூட்டம் தொடக்கம்!

ஐசிசியின் அழுத்தத்துக்கு அடிபணிய மாட்டோம்; டி20 உலகக் கோப்பை விவகாரத்தில் வங்கதேசம் பிடிவாதம்!

3வது காலாண்டு வருவாய் தொடர்ந்து டெக் மஹிந்திரா பங்குகள் உயர்வு!

SCROLL FOR NEXT