கே.பி. சா்மா ஓலி file photo
உலகம்

நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஓலி ராஜிநாமா!

நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஓலி தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

இணையதளச் செய்திப் பிரிவு

நேபாளத்தில் தலைவிரித்தாடும் ஊழல், பொருளாதார சீரழிவுக்காக அரசைக் கண்டித்து நேபாள மக்கள் நடத்தி வரும் போராட்டம் வலுப்பெற்ற நிலையில், அந்நாட்டு பிரதமர் கே.பி. சர்மா ஓலி தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

முன்னதாக, நேபாளத்தில் ‘யூடியூப்’, ‘இன்ஸ்டாகிராம்’, ‘ஃபேஸ்புக்’ உள்பட 26 சமூக வலைதள செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக இளைஞா்கள் நடத்திய போராட்டம், அரசுக்கு எதிரான போராட்டமாக மாறிய நிலையில், பிரதமர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (சிபிஎம்-யுஎம்எல்) மற்றும் நேபாள காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சியை நடத்தி வந்த நிலையில், அரசின் மிகப்பெரிய ஊழல் மற்றும் பொருளாதாரத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களின் போராட்டம் வன்முறையாக மாறியது.

இந்நிலையில், போராட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பொறுப்பேற்று நேபாள காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த உள்துறை அமைச்சர், விவசாயத் துறை அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜிநாமா செய்து வந்த நிலையில், தற்போது நேபாள பிரதமர் தனது பதவியை ராஜிநாமா செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

நேபாள பிரதமராக கே.பி.சா்மா ஓலி பதவியேற்றதில் இருந்து அரசின் பல்வேறு துறைகளில் ஊழல் நடைபெற்று வருவதாகக் குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இதனால் திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டமானது சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரானது மட்டுமன்றி ஊழலுக்கு எதிரானதாக மாறி செவ்வாயன்றும் தொடர்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கோட்டையன் வீட்டில் திரளும் ஆதரவாளர்கள்! அடுத்தகட்ட நகர்வு என்ன?

அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் இபிஎஸ்தான்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு

கான்ஜுரிங் படத்தின் சுவாரசியத்தை குலைத்த ரசிகரால் திரையரங்கில் அடிதடி!

ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி!

உலகத் தலைவர்களில் முதன்மையானவர் மோடி; இரும்பு மனிதர் அமித் ஷா: செங்கோட்டையன்

SCROLL FOR NEXT