நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டத்தில் நாடு முழுவதும் பொதுச் சொத்துக்கள் சூறையாடப்பட்டதையடுத்து, நாட்டில் அமைதிக்கான முயற்சியை அந்நாட்டு ராணுவம் கையிலெடுத்துள்ளது.
நேபாளத்தில் சமூக வலைதள செயலிகளுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராகவும், அரசின் மிகப்பெரிய ஊழலுக்கு எதிராகவும் அந்நாட்டு இளைஞர்கள் திங்கள்கிழமையில் போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்தப் போராட்டத்தில் நாடு முழுவதும் பல்வேறு அரசுக் கட்டடங்கள் சூறையாடப்பட்டு, பொதுச் சொத்தும் பெரிதளவில் சேதப்படுத்தப்பட்டன.
இந்த நிலையில், நாடுதழுவிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கிய நேபாள ராணுவம், நாட்டின் முக்கிய நகரங்களில் கட்டுப்பாடுகளை விதித்தது.
பொதுமக்களின் மீதான தாக்குதல் மற்றும் பொதுச் சொத்துக்களின் மீதான சேதம் குறித்து கவலை தெரிவித்த ராணுவம், தேவைப்பட்டால் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறும் பொதுமக்களை வலியுறுத்தியது.
தெருக்கள்தோறும் பாதுகாப்புப் படையும், தீவைக்கப்பட்ட கட்டடங்களில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள விரையும் தீயணைப்பு வாகனங்கள் மட்டுமே திரிவதால் தெருக்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
நாட்டில் நாள்தோறும் சுமார் 5,000 இளைஞர்கள், வேலைதேடி வெளிநாடுகளுக்குச் செல்வதாகக் கூறியும், சமூக வலைதளச் செயலிகள் மீதான தடையை நீக்கக் கோரியுமே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் 19 பேர் கொல்லப்பட்டதுடன், பிரதமர் பதவியை சர்மா ஓலி ராஜிநாமாவும் செய்து விட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.