போலந்து நாட்டுக்குள் ரஷியாவின் ட்ரோன்கள் ஊடுருவியதால், ரஷியாவின் மீது நடவடிக்கை நேட்டோ அமைப்புக்கு போலந்தும் உக்ரைனும் வலியுறுத்தியுள்ளது.
ரஷியா - உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீண்டுவரும் போரை நிறுத்த அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும், உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா நிறுத்துவதாயில்லை.
இந்த நிலையில், உக்ரைன் மீது தாக்குதல் நடத்திய சில ஆளில்லா ட்ரோன்கள், போலந்து நாட்டுக்குள் ஊடுருவின. இதனையடுத்து, ரஷியாவின் ட்ரோன்களை போலந்து ராணுவம் சுட்டு வீழ்த்தியது.
நேட்டோ அமைப்பில் உறுப்பினராக இருக்கும் எந்தவொரு நாட்டின் மீதான தாக்குதலோ போர் நடவடிக்கையோ, ஒட்டுமொத்த நேட்டோ அமைப்பின் மீதான செயல்பாடாகக் கருதப்படும். இந்த நிலையில், ரஷியாவுக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்று போலந்தும் உக்ரைனும் நேட்டோ அமைப்பை வலியுறுத்தியுள்ளன.
போலந்து நாட்டுக்குள் ரஷியாவின் ட்ரோன்கள் ஊடுருவியது ஐரோப்பிய நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.