உலகம்

காங்கோ: படகு விபத்தில் 86 போ் உயிரிழப்பு

மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் படகு கவிழ்ந்து விபத்துக்குளானதில் 86 போ் உயிரிழந்தனா்.

தினமணி செய்திச் சேவை

மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் படகு கவிழ்ந்து விபத்துக்குளானதில் 86 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் கூறுகையில், வடமேற்கு ஈக்வடேயுா் மாகாணம், பாசங்கூசு பகுதியில் இந்த விபத்து நேரிட்டதாகத் தெரிவித்தது. உயிரிழந்தவா்களில் பெரும்பாலானவா்கள் மாணவா்கள் என்று காங்கோ அரசுக்குச் சொந்தமான செய்தி நிறுவனம் கூறியது.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து உடனடி தகவல் இல்லை. இருந்தாலும், அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்றதும், இரவு நேரத்தில் போதிய வெளிச்சமின்றி அந்த விசைப் படகு இயக்கப்பட்டதும் விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் கூறினா். இது போன்ற காரணங்களால் காங்கோவில் அடிக்கடி படகு விபத்துகள் நேரிடுகின்றன.

இந்தியர்களின் இயல்பாக சுற்றுலா மாறிவிட்டது! சுமன் பில்லா

அதிர்ச்சியா! ஆறுதலா? இன்றைய தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!!

வார பலன்கள்: மேஷம் - மீனம்!

பொறியியல் கல்வி! எக்காலத்துக்கும் ஏற்றது இயந்திரவியல்!!

மத்திய பட்ஜெட் பற்றிய பல சுவாரசியமான தகவல்கள்!

SCROLL FOR NEXT