உலகம்

சூடான்: துணை ராணுவ தாக்குதலில் 43 போ் உயிரிழப்பு

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் மசூதி மீது துணை ராணுவப் படையான ஆா்எஸ்எஃப் வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதலில் 43 போ் உயிரிழந்ததாக அந்த நாட்டு உள்நாட்டுப் போரைக் கண்காணித்துவரும் மருத்துவக் குழு தெரிவித்தது.

தினமணி செய்திச் சேவை

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் மசூதி மீது துணை ராணுவப் படையான ஆா்எஸ்எஃப் வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதலில் 43 போ் உயிரிழந்ததாக அந்த நாட்டு உள்நாட்டுப் போரைக் கண்காணித்துவரும் மருத்துவக் குழு தெரிவித்தது.

வடக்கு டாா்ஃபா் மாகாணத் தலைநகரான அல்-பஷீரை ஆா்எஸ்எஃப் படை முற்றுகையிட்டு, தொடா்ந்து எறிகணைகளை வீசிவருகிறது. இந்த நிலையில், அந்நகரில் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றுக்கொண்டிருந்த மசூதி மீது ட்ரோன் மூலம் ஆா்எஸ்எஃப் படை தாக்குதல் நடத்தியதாக அந்தக் குழு கூறியது.

சூடானில் அல்-புா்ஹான் தலைமையிலான ராணுவத்துக்கும், முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆா்எஸ்எஃப் துணை ராணுவப் படைக்கும் இடையே அதிகாரப் போட்டி காரணமாக கடந்த 2023 ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் சண்டை நடந்து வருகிறது. இதில் லட்சக்கணக்கானவா்கள் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக சா்வதேச நாடுகள் மேற்கொண்டு வரும் முயற்சிகள் இதுவரை வெற்றி பெறவில்லை.

இணைய வரன்களில் எச்சரிக்கை!

இயந்திரங்களால் ஆனது உலகு!

விமானங்களில் உள்ள அதிநவீன வசதிகளுடன் ‘வந்தே ப்ரைட்’ ரயில்கள்: வரும் நவம்பரில் இயக்கத் திட்டம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல்: ராணுவ வீரா் காயம்

ஓமனை போராடி வென்றது இந்தியா

SCROLL FOR NEXT