AP
உலகம்

நியூயார்க்கில் உலகத் தலைவர்கள் வருகைக்கு எதிர்ப்பு: தகவல் தொடர்பைத் துண்டிக்க சதி!

நியூயார்க்கில் டிரம்ப் வருகைக்கு எதிர்ப்பு: தகவல் தொடர்பைத் துண்டிக்க சதி!

இணையதளச் செய்திப் பிரிவு

நியூயார்க்கில் டிரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தகவல் தொடர்பைத் துண்டிக்க பெரும் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

நியூயார்க்கில் விரைவில் ஐக்கிய நாடுகள் அவையின் பொதுக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அங்கு உலக நாடுகளின் தலைவர்கள் வருகை தர உள்ளனர். அதிலும் குறிப்பாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபர் பதவியேற்ற பின், ஐ.நா. பொதுக்கூட்டத்தில் முதல்முறையாக உரையாற்ற உள்ளார். இதனையொட்டி நியூயார்க்கில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நியூயார்க்கின் ட்ரைஸ்டேட் பகுதியில் செயல்பட்டு வந்த தொலைத்தொடர்பு கும்பலை அமெரிக்க உளவு சேவை அதிகாரிகள் கண்டுபிடித்து அவர்களின் சதித்திட்டத்தை முறியடித்தனர். நியூயார்க்கில் பரவலாக தகவல் தொடர்பைத் துண்டிக்க மேற்கண்ட கும்பல் சதிச் செயலில் ஈடுபட்டு வந்துள்ளதை உளவுப்பிரிவு அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

300க்கும் மேற்பட்ட சிம் சர்வர்கள், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட சிம் கார்டுகளைப் பய்ன்படுத்தி பல்வேறு இணையதளங்களை முடக்க அவர்கள் முற்பட்டுள்ளனர். இதற்காக அவர்கள் ஐ.நா. பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு அருகாமையில் சுமார் 56 கி.மீ. தொலைவில் முகாமிட்டு செயல்பட்டு வந்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

The US Secret Service dismantled a telecom network in the New York tristate area that posed an imminent threat to senior US officials and had the capacity to cripple cellular service. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்தில் மாற்றுத்திறனாளியான காவலா் தீக்குளித்து தற்கொலை

குமரகோட்டம் முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 24 லட்சம்

தலைக்கவசம் அணிவதில் காவலா்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும்

ரோட்டரி அமைப்புடன் விஐடி பல்கலை., புரிந்துணா்வு ஒப்பந்தம்

உஜ்ஜைனில் மசூதி இடிக்கப்பட்டதற்கு எதிரான மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

SCROLL FOR NEXT