உலகம்

13 மாத குழந்தை கொடூரக் கொலை! 17 ஆண்டு வழக்கில் கொலையாளிக்கு விஷ ஊசியால் மரண தண்டனை!

அமெரிக்காவில் 13 மாத குழந்தையைக் கொலை செய்த வழக்கில் கொலையாளிக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றம்

இணையதளச் செய்திப் பிரிவு

அமெரிக்காவில் குழந்தையை சித்ரவதை செய்து கொன்ற வழக்கில், கொலையாளிக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

2008 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் பிலெய்ன் மிலெம் என்பவர், தன்னுடைய காதலியின் 13 மாத குழந்தையான அமோராவை கொடூரமாகச் சித்ரவதை செய்தார். அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் 17 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கில், கொலையாளியான மிலெமுக்கு மரண தண்டனை வியாழக்கிழமை இரவில் (இந்திய நேரப்படி) நிறைவேற்றப்படவுள்ளது.

மிலெமுக்கு விஷ ஊசி செலுத்துவதன் மூலம், அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும்.

குற்றத்தின் பின்னணி

குழந்தை அமோராவுக்கு பேய் பிடித்திருப்பதாக அமோராவின் தாயார் ஜெஸ்ஸிகா கார்சென் கூறியதாகவும், அதனால்தான் குழந்தையைக் கொன்றதாகவும் மிலெம் தரப்பில் வாதிடினர். இதனையடுத்து, கார்செனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் கொல்லப்பட்ட குழந்தை அமோராவின் உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள், அதிர்ச்சிகரமான உடற்கூறாய்வு அளித்தனர்.

சுமார் 30 மணிநேரத்துக்கு, குழந்தையை சுத்தியால் அடித்தும், கடித்தும், கழுத்தை நெரித்தும், சிதைத்தும் சித்ரவதை செய்துள்ளார், மிலெம்.

குழந்தையின் உடலைப் பரிசோதித்த தடயவியல் நோயியல் நிபுணர், குழந்தைக்கு மண்டை ஓட்டில் பல எலும்பு முறிவுகள், ஏராளமான கடித்த காயங்கள் உள்பட பல காயங்கள் இருந்ததால், குழந்தையின் மரணத்துக்கான காரணத்தைக் கண்டறிய முடியவில்லை என்று தெரிவித்தனர்.

இந்த வழக்கின்போது, ``மிலெம் ஒரு அப்பாவி. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். அவருக்கு மதத்தின் மீது பிரமை ஏற்பட்டிருந்தது. நரம்பியல் கோளாறால் பாதிக்கப்பட்டதால், அவருக்கு புலனுணர்வு காட்சி நோயும் ஏற்பட்டிருந்தது. இந்த நோயால்தான், குழந்தையின் முகத்தில் தீய சக்திகளை அவரால் காண முடிந்தது. இதுவே குழந்தையை அவர் கொல்வதற்குக் காரணமாக அமைந்தது. கார்சென்தான், குழந்தையின் இறப்புக்குக் காரணம். மிலெமுக்கு எந்தப் பங்கும் இல்லை’’ என்று மிலெம் தரப்பு வழக்குரைஞர்கள் வாதிட்டனர்.

இருப்பினும், மிலெம் தரப்பு வாதங்களை நீதிமன்றம் தொடர்ந்து மறுத்து வந்தது. 2019 மற்றும் 2021 ஆண்டுகளிலேயே அவரது மரண தண்டனை நிறுத்தப்பட்டிருந்தது.

இதையும் படிக்க: பிரான்ஸ் முன்னாள் அதிபர் சர்கோஸிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை!

Texas death row inmate to be executed for killing child during 'exorcism'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துப்புரவு பணியாளர் அல்ல! தூய்மைப் பணியாளர்! திருத்திய முதல்வர் Stalin

உங்களுக்குத் துணையாக இந்த முத்துவேல் கருணாநிதி இருக்கிறேன்: மாணவர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழாவில் ரேவந்த் ரெட்டி!

அதிமுகவுடன் கூட்டு சேருபவர்கள் பலவீனமானவர்கள்: கே. எஸ். அழகிரி

புதிய கல்விக் கொள்கை குறித்து Thiagarajan Kumararaja | கல்வியில் சிறந்த தமிழ்நாடு

SCROLL FOR NEXT