பாரன் டிரம்ப் Instagram | Barron Trump
உலகம்

ரூ.1,330 கோடி சொத்து! டிரம்ப்பின் 19 வயது மகன் அசத்தியது எப்படி?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகன் பாரன் டிரம்ப் 150 மில்லியன் டாலர் சம்பாதித்து அசத்தல்

தினமணி செய்திச் சேவை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகன் பாரன் டிரம்ப் 150 மில்லியன் டாலர் சம்பாதித்து அசத்தியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் இளைய மகன் பாரன் டிரம்ப்பின் (19) சொத்து மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது. அவரது தாயார் மெலானியா மற்றும் சகோதரி இவாங்கா டிரம்ப்பின் சொத்து மதிப்பைவிட அதிகரித்துள்ளது.

19 வயதே ஆகும் பாரன் டிரம்ப்பின் சொத்து மதிப்பு 150 மில்லியன் (சுமார் ரூ.1,330 கோடி) டாலராக உயர்ந்துள்ளது. கிரிப்டோகரன்சி முதலீட்டால்தான் அவரது இந்த சொத்து மதிப்பு உயர்வுக்குக் காரணமாக அமைந்துள்ளது. தற்போது கிரிப்டோகரன்சியில் 525 மில்ல்லியன் டாலர் மதிப்புகளை பாரன் டிரம்ப் தன்வசம் வைத்துள்ளார்.

43 வயதான இவாங்கா டிரம்ப் 100 மில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இருக்கும் நிலையில், 19 வயதேயான பாரன் டிரம்ப் 150 மில்லியன் டாலர் சொத்து மதிப்பைப் பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி, கிரிப்டோ குறித்து டிரம்ப்பையும் அறியச்செய்து, அவரின் சொத்து மதிப்பையும் உயரச் செய்திருக்கிறார் பாரன் டிரம்ப்.

செல்வந்தர் குடும்பங்களின் வரிசையில் 7.3 பில்லியன் டாலர் மதிப்புடன் டிரம்ப்பின் குடும்பம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இடியட் என்று தேடினால் டிரம்ப் படம் வருவது ஏன்? நீதிமன்றத்தில் சுந்தர் பிச்சை விளக்கம்

Donald Trump's son Barron Trump’s net worth revealed: now richer than some of his famous family members

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூமலூரில் நாளை மின்தடை

கோரைப்புற்களுக்கு இடையே கிடந்த பச்சிளம் குழந்தை மீட்பு

செயின்ட் மைக்கேல்ஸ் அகாதெமியில் நவ.15-இல் பல்சுவை நிகழ்ச்சி

திருப்பூரில் அதிகரிக்கும் வைரஸ் காய்ச்சல்

‘காந்தா’ படத்துக்கு தடை கோரி வழக்கு: துல்கா் சல்மான் பதிலளிக்க உத்தரவு

SCROLL FOR NEXT