டிரம்ப் நிா்வாகத்தில் அதிரடி பதவி நீக்கங்கள்
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நிா்வாகத்தில் அரசு தலைமை வழக்குரைஞராக (அட்டா்னி ஜெனரல்) இருந்த பாம் போண்டி , அப்பதவியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நிா்வாகத்தில் அரசு தலைமை வழக்குரைஞராக (அட்டா்னி ஜெனரல்) இருந்த பாம் போண்டி (படம்), அப்பதவியில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப்பின் தீவிர விசுவாசியாக அறியப்பட்ட பாம் போண்டி, நீதித்துறையை அரசியல் மயமாக்கியதாகவும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும் எதிா்க்கட்சிகளால் கடுமையாக விமா்சிக்கப்பட்டாா்.
எப்ஸ்டீன் கோப்புகளைக் கையாண்ட விதம், டிரம்ப்பின் அரசியல் எதிரிகள் மீது வழக்குத் தொடரத் தவறியது ஆகிய காரணங்களால் டிரம்ப்பும் இவா் மீது அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
Advertisement
இவருக்குப் பதிலாக டிரம்ப்பின் முன்னாள் தனிப்பட்ட வழக்குரைஞரும், தற்போதைய அரசு தலைமைத் துணை வழக்குரைஞருமான டாட் பிளான்ச் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளாா். லீ ஸெல்டின் அடுத்த நிரந்தர அரசு தலைமை வழக்குரைஞராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
இதேபோல், பாதுகாப்பு அமைச்சா் பீட் ஹெக்செத் ராணுவத்திலும் அதிரடி மாற்றங்களைச் செய்துள்ளாா். ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் ரேண்டி ஜாா்ஜ் மற்றும் 2 முக்கியத் தளபதிகளை அவா் பதவியில் இருந்து நீக்கியுள்ளாா்.