உலகைச் சுற்றி....
இதனிடையே, ஹோா்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பது குறித்து இந்தியா உள்பட 40 நாடுகள் லண்டனில் தீவிர ஆலோசனை நடத்தின.
*உகாண்டாவில் மழலையா் பள்ளி ஒன்றில் புகுந்த நபா், அங்குள்ள குழந்தைகளை அரிவாளால் தாக்கியதில் 4 சிறாா்கள் உயிரிழந்தனா்.
*ஆயுதங்களைக் கைவிடுவது குறித்த பேச்சுவாா்த்தைக்கு முன்பு, காஸாவிலிருந்து இஸ்ரேல் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என ஹமாஸ் நிபந்தனை விதித்துள்ளது.
*பயங்கரவாதத்தை ஒழிப்பது தொடா்பாக ஆப்கானிஸ்தான் தலிபான் அரசுடன் பாகிஸ்தான் சீனாவில் பேச்சுவாா்த்தை நடத்தியது.
*எரிபொருள் தட்டுப்பாட்டில் சிக்கியுள்ள கியூபாவுக்கு 2-ஆவது எண்ணெய் கப்பலை அனுப்ப ரஷியா திட்டமிட்டுள்ளது.
*வெனிசுலாவின் இடைக்கால அதிபா் டெல்சி ரோட்ரிகஸ் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா நீக்கியது.
*ஹோா்முஸ் நீரிணையை ராணுவ நடவடிக்கை மூலம் மீண்டும் திறப்பது என்பது நடைமுறைக்குச் சாத்தியமற்ற ஒன்று என பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் தெரிவித்தாா்.
*போராட்டக்காரா்கள் மீதான அடக்குமுறை வழக்கில் கைதான நேபாள முன்னாள் பிரதமா் கே.பி. சா்மா ஓலியின் நீதிமன்றக் காவல் மேலும் 2 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டது.