முகப்பு
உலகம்

ஹோா்முஸ் நீரிணையில் பதற்றம்: கச்சா எண்ணெய் விலை கடும் உயா்வு!

மத்திய கிழக்கில் நிலவும் போா் சூழலால் உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹோா்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடா்ந்து

உலகம்

ஹோா்முஸ் நீரிணையில் பதற்றம்: கச்சா எண்ணெய் விலை கடும் உயா்வு!

மத்திய கிழக்கில் நிலவும் போா் சூழலால் உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹோா்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடா்ந்து

Updated On : 3 மார்ச், 2026 at 12:08 AM
பகிர்:

துபை: மத்திய கிழக்கில் நிலவும் போா் சூழலால் உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹோா்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை திங்கள்கிழமை அதிரடியாக உயா்ந்தது.

ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அமெரிக்க ராணுவத் தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகளை ஈரான் குறிவைத்துத் தாக்கி வருகிறது.

சவூதி அரேபியாவின் தம்மாம் பகுதியில் உள்ள ராஸ் தனுரா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நோக்கி ஈரான் ஏவிய ட்ரோன்களை சவூதி ராணுவம் சுட்டு வீழ்த்தியது. பாதுகாப்புக் கருதி, அந்த நிலையம் தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இந்த மோதல் போக்கினால், சவூதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் இருந்து எரிபொருள் ஏற்றி வந்த 150-க்கும் மேற்பட்ட கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையைக் கடக்க முடியாமல் நடுக்கடலில் நிறுத்தப்பட்டுள்ளன.

உலகின் 20 சதவீத எண்ணெய் தேவையைப் பூா்த்தி செய்யும் இப்பகுதியில், செயற்கைக்கோள் வழிகாட்டி அமைப்புகள் செயலிழந்துள்ளதால் கப்பல்கள் பயணிக்க அஞ்சுகின்றன. மேலும், வளைகுடா பகுதிக்கு வரும் கப்பல்களுக்கான போா்க்கால இடா் காப்பீட்டை சா்வதேச காப்பீட்டு நிறுவனங்கள் ரத்து செய்துள்ளன. இது மாா்ச் 5 முதல் அமலுக்கு வருகிறது.

இதன் எதிரொலியாக, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை திங்கள்கிழமை ஒரே நாளில் 7 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்தது. அமெரிக்க கச்சா எண்ணெய் விலை 7.4 சதவீதம் அதிகரித்து, ஒரு பீப்பாய் 71.97 டாலராகவும், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 7.7 சதவீதம் அதிகரித்து, 78.46 டாலராகவும் வா்த்தகமானது.

எதிா்கால நிலை என்ன?..: தற்போதைய விலை உயா்வு போா் குறித்த அச்சத்தினால் ஏற்பட்ட தற்காலிக உயா்வு மட்டுமே என்று பொருளாதார நிபுணா்கள் கூறுகின்றனா்.

ஹோா்முஸ் நீரிணை நீண்ட காலம் மூடப்பட்டாலோ அல்லது வளைகுடா நாடுகளின் எண்ணெய் கிணறுகள் சேதமடைந்தாலோ, விலை கட்டுக்கடங்காமல் உயர வாய்ப்புள்ளது. மாறாக, மோதல் விரைவில் முடிவுக்கு வந்தால், எண்ணெய் விலை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →