கோப்பிலிருந்து படம்  IANS
உலகம்

ரஷிய மருத்துவ பல்கலை.யில் இந்தியர் உள்பட 8 பேருக்கு கத்திக்குத்து!

ரஷியாவில் இந்தியர் உள்பட 8 பேருக்கு கத்திக்குத்து!

இணையதளச் செய்திப் பிரிவு

மாஸ்கோ : ரஷியாவில் இந்தியர் உள்பட 8 பேரைக் கத்தியால் கொடூரமாகத் தாக்கிய நபரை போலீஸார் கைது செய்தனர்.

ரஷியாவின் பேஷ்கோர்டோஸ்டான் குடியரசில் உள்ள அஃபா பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்த பதின்பருவ இளைஞர் ஒருவர், தம்மிடமிருந்த கத்தியால் அங்கிருந்த மாணவர்களை கண்மூடித்தனமாகக் குத்தி காயப்படுத்தினார். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் அந்த இளைஞரைப் பிடிக்க முற்பட்டபோது காவலர்களையும் அவர் தாக்கினார்.

அதனைத்தொடர்ந்து, அந்த நபர் கத்தியால் தன் உடலைத் தானே கிழித்துக்கொண்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். அவரைச் சமாளித்து மடக்கிப் பிடித்த போலீஸார், அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமத்தித்துள்ளனர். உடலில் பல இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தத் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு நபர் மற்றும் 2 காவலர்கள் உள்பட மொத்தம் 8 பேர் பலத்த காயமடைந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், 15 வயது பூர்த்தியடைந்த அந்த இளைஞர் எதற்காக மாணவர்களைக் குறிவைத்து கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டார் என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

At least six persons, including an Indian, and two police officers were injured in a stabbing attack on Saturday in a sports hall of foreign students' hostel at a university in Russia's Bashkortostan Republic, local media reports said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வித் லவ் முதல் வசூல் இவ்வளவா?

நீட் பயிற்சி மாணவி மரணத்துக்கு நீதி கோரி போராடிய சுயேச்சை எம்.பி. கைது: ராகுல் கண்டனம்!

அமெரிக்காவிடம் பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்! - ஜெய்ராம் ரமேஷ் | செய்திகள்: சில வரிகளில் | 7.2.26

நேபாளம்: மர்ம பொருள் வெடித்து 4 சிறுவர்கள் காயம்

ஜிவி பிரகாஷின் லக்கி டிரைலர்!

SCROLL FOR NEXT