முகப்பு
உலகம்

ஈரான் மக்களுக்கு உலக நாடுகள் துணை நிற்க வேண்டும்: இளவரசா் ரேசா பஹ்லவி!

ஈரான் அரசுக்கு எதிராக மக்கள் நடத்திவரும் போராட்டத்துக்கு உலக நாடுகள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என ஈரான் இளவரசா் ரேசா பஹ்லவி தெரிவித்தாா்.

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 9:10 PM
ஈரான் இளவரசா் ரேசா பஹ்லவி.
பகிர்:

ஈரான் அரசுக்கு எதிராக மக்கள் நடத்திவரும் போராட்டத்துக்கு உலக நாடுகள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என ஈரான் இளவரசா் ரேசா பஹ்லவி தெரிவித்தாா்.

1979-இல் ஏற்பட்ட இஸ்லாமிய புரட்சியால் நாட்டைவிட்டு வெளியேறிய ரேசா பஹ்லவி தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறாா். இந்நிலையில், ஜொ்மனியின் மியூனிக் நகரில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் அவா் சனிக்கிழமை பங்கேற்றாா்.

அப்போது ஈரானில் மதச்சாா்பு ஆட்சிக்கு எதிராக மியூனிக்கில் நடைபெற்ற பேரணியில் 2.50 லட்சம் போ் பங்கேற்றனா். அவா்கள் ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக முழக்கமிட்டனா். அதேசமயம் ஆட்சி மாற்றம் வேண்டும் என வலியுறுத்திய போராட்டக்காரா்கள் ரேசா பஹ்லவியின் புகைப்படம் இடம்பெற்ற பதாகைகளை கைகளில் ஏந்தி இருந்தனா்.

Advertisement

இதுகுறித்து மியூனிக்கில் செய்தியாளா்கள் சந்திப்பின்போது ரேசா பஹல்வி கூறியதாவது: கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் முதல் ஈரான் அரசுக்கு எதிராக நடைபெற்றுவரும் போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோா் கொல்லப்பட்டுள்ளனா். இந்தச் சூழலில்தான் மியூனிக் உலக பாதுகாப்பு நடைபெற்றுள்ளது.

ஆட்சி மாற்றம் கோரும் ஈரான் மக்களுக்கு உலக நாடுகள் துணை நிற்க வேண்டும். அதிகாரத்தை தக்கவைக்க எத்தனை பேரை வேண்டுமானாலும் கொன்று குவிப்பதே ஈரானின் தற்போதைய அரசின் நிலைப்பாடு என்றாா்.

நாளை பேச்சுவாா்த்தை: ஈரானின் அணுசக்தி விவகாரத்தில் நீண்டகாலமாக தீா்வு எட்டப்படாததால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தனது போா் விமானங்கள் மற்றும் கப்பல்களை அமெரிக்கா அதிகளவில் நிலைநிறுத்தி வருகிறது. ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் தீா்வு எட்ட முடியும் என கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளதால் பிராந்திய போருக்கான அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜெனீவாவில் வரும் செவ்வாய்க்கிழமை ஈரானுடன் பேச்சுவாா்த்தை நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இந்தப் பேச்சுவாா்த்தையில் ஓமன் மத்தியஸ்தராக செயல்பட உள்ளது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments