அமெரிக்கப் படைகளால் நாடுகடத்தப்பட்ட வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ் ஆகியோரின் இருப்பிடம் குறித்து தெரியவில்லை என துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் கூறியுள்ளார்.
வெனிசுவேலா நாட்டின் மீது அமெரிக்கா இன்று (ஜன. 3) திடீரென வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, அந்நாட்டு அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ் ஆகியோரை நாடுகடத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, வெனிசுவேலா முழுவதும் பரபரப்பான சூழல் நிலவும் நிலையில், அந்நாட்டு துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் அரசு தொலைக்காட்சியின் மூலம் மக்களிடம் பேசினார்.
அப்போது, அவர் கூறியதாவது:
“அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ் ஆகியோர் எங்கே இருக்கின்றனர் என்று எங்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்பதற்கு எங்களுக்கு ஆதாரம் வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, போதைப் பொருள் பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வதாகக் கூறி எண்ணெய் வளமிக்க நாடான வெனிசுவேலாவுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த சில மாதங்களாக ராணுவ நடவடிக்கை மேற்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.