உலகிலேயே வெனிசுலாவில்தான் மிக அதிக எண்ணெய் வளம் உள்ளது என்று நம்பப்படுகிறது. அந்நாட்டில் 30,000 கோடி பீப்பாய்க்கு எண்ணெய் வளம் உள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும் துல்லியமாக எவ்வளவு எண்ணெய் வளம் உள்ளது என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
அதேவேளையில், உலகில் பெட்ரோல், டீசல் பிரித்தெடுக்கப்படும் மொத்த கச்சா எண்ணெய் வளத்தில் 17 சதவீதம் வெனிசுலாவில் உள்ளதாக சில மதிப்பீடுகளில் கணிக்கப்பட்டுள்ளது.
எனினும் தன்னிடம் உள்ள மொத்த எண்ணெய் வளத்தில் சிறு பகுதியைத்தான் வெனிசுலா தோண்டி எடுத்துள்ளது.
அந்நாட்டு அதிபராக ஹியூகோ சாவேஸ் இருந்தபோது அங்கு ஒரு நாளைக்கு சுமாா் 35 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்து, உலகில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் முதல் 10 நாடுகளின் வரிசையில் வெனிசுலா இடம்பிடித்தது.
இந்நிலையில், வெனிசுலாவின் எண்ணெய் வளங்கள் மீது கோடிக்கணக்கில் முதலீடு செய்ய உலகின் பெரும் எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.