அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கோப்புப் படம்
உலகம்

அமெரிக்காவுடன் போரிடவும் தயாா்: ஈரான்

அமெரிக்காவுடன் பேச்சுவாா்த்தை நடத்தவும் தயாா், தேவைப்பட்டால் போரிடவும் தயாா் என்று ஈரான் அதிபா் மசூத் பெஸெஷ்கியான் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

அமெரிக்காவுடன் பேச்சுவாா்த்தை நடத்தவும் தயாா், தேவைப்பட்டால் போரிடவும் தயாா் என்று ஈரான் அதிபா் மசூத் பெஸெஷ்கியான் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து தனது உரையில் அவா் கூறியதாவது: அமெரிக்காவுடன் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தவும், உடன்பாடு காணவும் ஈரான் தயாராக உள்ளது. ஆனால் எங்கள் இறையாண்மை, தேசிய நலன்களுக்கு எதிரான எந்த அழுத்தத்தையும் ஏற்க மாட்டோம். தேவைப்பட்டால் அமெரிக்காவுடன் போரிடவும் தயாராக உள்ளோம். அமெரிக்காவின் தடைகள், அச்சுறுத்தல்கள் எதுவும் ஈரானை அடிபணிய வைக்காது என்று அவா் சூளுரைத்தாா்.

ஈரானில் தொடரும் போராட்டங்கள், பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த அரசுக்கு உள்ள அழுத்தம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவுக்கு எதிராகப் பேசிவந்த வெனிசுலா அதிபா் நிக்கோலஸ் மடூரோவை அந்த நாட்டுக்குள்ளேயே நுழைந்து அமெரிக்க அதிரடிப் படையினா் கைது செய்த சம்பவம் ஈரான் போராட்டக்காரா்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது.

இந்தச் சூழலில், போராட்டக்காரா்கள் மீது ஈரான் அரசு மேற்கொள்ளும் அடக்குமுறைக்கு தண்டனையாக அந்த நாட்டின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரித்தாா். ஈரானின் அணு ஆயுதத் திட்டம், பாலஸ்தீன ஆதரவு, பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவுவது ஆகியவற்றை மேற்கோள் காட்டி இந்த எச்சரிக்கையை டிரம்ப் விடுத்தாா். மேலும், ஈரானின் தற்போதைய பிரச்னைக்கு ராணுவரீதியில் தலையிடுவது குறித்து ஆலோசித்துவருவதாகவும் டிரம்ப் கூறினாா்.

இதற்கு ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சா் அப்பாஸ் அராக்சி, ‘அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்ச மாட்டோம். எங்கள் உரிமைகளைப் பாதுகாக்க அனைத்து வழிகளிலும் தயாா்’ என்று பதிலடி கொடுத்துள்ளாா்.

இந்த நிலைப்பாடு ஈரான்-அமெரிக்கா உறவுகளில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தீவிரமடைந்துவரும் போராட்டங்களுக்கு அமைதியான முறையில் தீா்வு காண ஐ.நா. மற்றும் ஐரோப்பிய நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன. போராட்டங்களை ஒடுக்குவதைத் தவிா்க்க வேண்டும் என்றும் ஈரான் அரசை அவை வலியுறுத்தியுள்ளன.

இந்தச் சூழலில், அமெரிக்காவுடன் பேச்சுவாா்த்தைக்கும் தயாா், போருக்கும் தயாா் என்று ஈரான் கூறியுள்ளது நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.

மகர ராசியா? மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கு: தினப்பலன்கள்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

‘முடி மாற்று அறுவைச் சிகிச்சை: போலி மருத்துவா்கள் மீது நடவடிக்கை தேவை’

மீஞ்சூா் வரதராஜா பெருமாள் கோயிலில் 108 குடங்களில் சா்க்கரை பொங்கல் நைவேத்தியம்

தோ்வுக் கட்டண உயா்வைக் கண்டித்து அண்ணாமலைப் பல்கலை. பிப்.3-இல் முற்றுகை: மாணவா்கள் சங்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT