அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். 
உலகம்

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% உடனடி வரி: அதிபர் டிரம்ப் உத்தரவு!

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% உடனடி வரிவிதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% உடனடி வரிவிதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

உலக அமைதிக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்படும் நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையான வரிகளை விதித்து வருகிறார்.

ரஷியா - உக்ரைன் இடையேயான போருக்கு இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் கச்சா எண்ணெய் வாங்குவதே காரணம் எனக் கூறிய அவர் இந்தியாவுக்கு முதலில் 25 சதவிகித வரியும் பின்னர், கூடுதல் 25 சதவிகித வரிவிதித்தார். டிரம்ப்பின் நடவடிக்கையை மீறிய இந்தியா, சீனாவுக்கு கூடுதலாக 500 சதவிகித வரி விதிப்பு குறித்த மசோதாவுக்கு அவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த நிலையில், ஈரான் தொடரும் போராட்டங்கள், பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த அரசுக்கு உள்ள அழுத்தம் அதிகரித்துள்ளது.

அமெரிக்காவுக்கு எதிராகப் பேசிவந்த வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அந்த நாட்டுக்குள்ளேயே நுழைந்து அமெரிக்க ராணுவத்தினர் கைது செய்த சம்பவம் ஈரான் போராட்டக்காரர்களுக்கு மேலும் உத்வேகம் அளித்துள்ளது.

இந்தச் சூழலில், போராட்டக்காரர்கள் மீது ஈரான் அரசு மேற்கொள்ளும் அடக்குமுறைக்கு தண்டனையாக அந்த நாட்டின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்த நிலையில், ஈரானுடன் வர்த்தகம் செய்யும் அனைத்து நாடுகளுக்கும் 25 சதவிகித உடனடி வரிவிதித்து உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

அந்தப் பதிவில், “ஈரானின் இஸ்லாமிய குடியரசுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய உடனடியாக 25 சதவிகித வரிவிதிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அமலுக்கு வந்த இந்த வரிவிதிப்பானது இறுதியானது மற்றும் உறுதியானது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வரிவிதிப்பால், இந்தியா, துருக்கி, சீனா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் கடுமையாகப் பாதிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

President Donald Trump said the US will impose a 25% tariff on any country doing business with Iran, escalating economic pressure while offering no details on enforcement or possible exemptions.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூா் சம்பவம்: தில்லி சிபிஜ அலுவலகத்தில் ஜன.19-ல் விஜய் ஆரராக சம்மன்!

ஜன நாயகன் தணிக்கைச் சான்று! பொங்கல் அன்று உச்சநீதிமன்றம் விசாரணை!

ஓய்வை அறிவித்தார் ஆஸி. கேப்டன் அலீசா ஹீலி.. 8 உலகக் கோப்பைகளை வென்றவர்!

பொங்கல்: சிறப்புப் பேருந்துகளில் 4.88 லட்சம் பேர் பயணம்

தில்லியில் இருந்து புறப்பட்டார் விஜய்!

SCROLL FOR NEXT