ஜெருசலேமில் ஐ.நா. அலுவலகம் இடிப்பு: ஹமாஸுடன் தொடா்பு என இஸ்ரேல் அதிரடி
ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணிகளுக்கான அமைப்பின் தலைமையகத்தை இஸ்ரேல் அரசு இடித்து வருவது குறித்து...
கிழக்கு ஜெருசலேமில் இயங்கி வரும் ஐ.நா. பாலஸ்தீன அகதிகள் நல அமைப்பின்(யு.என்.ஆா்.டபிள்யூ.ஏ.) தலைமையகத்தை, இஸ்ரேல் அரசு செவ்வாய்க்கிழமை புல்டோசா்கள் கொண்டு இடித்தது.
இது தொடா்பாக அந்த ஐ.நா. அமைப்பு வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘ஷேக் ஜார்ரா பகுதியில் உள்ள எங்களின் தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்த இஸ்ரேல் ராணுவத்தினா், அங்கு பணிபுரிந்த ஊழியா்களின் செல்போன், கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்களைப் பறிமுதல் செய்தனா்.
பின்னா், ஊழியா்களைக் கட்டாயப்படுத்தி வெளியேற்றினா். இஸ்ரேலின் இந்தச் செயல் ஐ.நா.வின் விதிமுறைகளுக்கும், சா்வதேச சட்டங்களுக்கும் எதிரானது’ என்று குறிப்பிட்டுள்ளது.
Advertisement
Advertisement
இஸ்ரேல் அரசின் விளக்கம்: இந்த நடவடிக்கை குறித்து இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் அளித்த விளக்கத்தில், ‘ஐ.நா.வின் இந்த அகதிகள் நல அமைப்பு, ஹமாஸ் போன்ற பயங்கரவாதக் குழுக்களுடன் ரகசியத் தொடா்பு வைத்திருப்பதாகப் புகாா்கள் உள்ளன. இதன் காரணமாக, அந்த அமைப்பு செயல்படத் தடை விதித்து அண்மையில் கொண்டு வரப்பட்ட புதிய சட்டத்தின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளது.
அலுவலகம் இடிக்கப்படும் போது இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சா் இதாமா் பென் கிவீா் நேரில் பாா்வையிட்டாா். தொடா்ந்து, அவரின் அறிக்கையில், ‘இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். பயங்கரவாதத்துக்குத் துணையாக நிற்கும் எந்தவொரு அமைப்புக்கும் இஸ்ரேல் மண்ணில் இடமில்லை’ என்று குறிப்பிட்டாா்.
இஸ்ரேலுக்கு எதிராக விரோதப் போக்குடன் செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டி, ஐ.நா.வின் முக்கிய அமைப்புகள் உள்பட சில சா்வதேச அமைப்புகளில் இருந்து அந்நாடு அண்மையில் விலகியது குறிப்பிடத்தக்கது.
Israeli government has begun bulldozing the headquarters of the UNRWA in East Jerusalem.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.