அமெரிக்காவில் குடும்பத் தகராறில் மனைவியைச் சுட்டுக் கொன்றதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஜய் குமார் அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் தமது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர்கள் வீட்டில் அடிக்கடி குடும்பத் தகராறும் அதனால் வீண் வாக்குவாதமும் ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை(ஜன. 23) ஏற்பட்ட குடும்பத் தகராறில் வீட்டிலிருந்த தமது மனைவியையும் உறவினர்களையும் விஜய் குமார் சுட்டுக் கொன்றதாக பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
அவருடைய வீட்டில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணையில் ஈடுபட்ட அதிகாரிகள் அங்கு விஜய் குமாரின் மனைவி மீமு தோக்ரா (43), உறவினர்களான கௌரவ் குமார் (33), நிதி சந்தர் (37), ஹரிஷ் சந்தர் (38) ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டதை உறுதி செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்டுள்ள விஜய் குமாரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.