காஸாவில் அமெரிக்க ஆதரவுடன் அமையவுள்ள புதிய பாலஸ்தீன நிா்வாகத்தில், தனது அமைப்பைச் சோ்ந்த 10,000 காவல்துறையினரைச் சோ்த்துக்கொள்ள வேண்டும் என்று ஹமாஸ் திடீா் கோரிக்கை விடுத்துள்ளது
ஆயுதங்களைக் கைவிடுவது தொடா்பான பேச்சுவாா்த்தைகள் தொடங்கவுள்ள நிலையில், ஹமாஸின் இந்த நிபந்தனை இஸ்ரேல் தரப்பில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
20 அம்சத் திட்டங்கள் கொண்ட இஸ்ரேல்-ஹமாஸ் போா்நிறுத்த ஒப்பந்தத்தின் 2-ஆம் கட்டமாக, அலி ஷாத் தலைமையிலான வல்லுநா்கள் குழுவிடம் காஸாவின் நிா்வாகம் ஒப்படைக்கப்பட உள்ளது.
அமெரிக்காவின் மேற்பாா்வையில் செயல்படும் இக்குழுவில் ஹமாஸ் உறுப்பினா்கள் யாரும் இடம்பெறவில்லை. அதேநேரம், காஸாவில் உள்ள 40,000 அரசு ஊழியா்கள் மற்றும் பாதுகாப்புப் படையினா் புதிய நிா்வாகக் குழுவுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று ஹமாஸ் கேட்டுக்கொண்டுள்ளது.