சீனாவுக்கும் பிரிட்டனுக்குமான வர்த்தக உறவால் பிரிட்டனுக்குப் பெரும் பொருளாதார லாபம் ஈட்டப்படவிருப்பதாக அந்நாட்டின் பிரதமர் கியர் ஸ்டார்மர் தெரிவித்தார்.
பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மர் அரசு முறைப் பயணமாக சீனாவுக்குச் சென்றுள்ளார். இந்தப் பயணத்தில், சீன அதிபர் ஷி ஜிங்பிங்குடன் இருநாட்டு உறவில் மேம்பாடு குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, பிரிட்டனுடன் கல்வி மற்றும் நிதி விவகாரங்களில் ஒத்துழைப்பளிக்க சீன அதிபர் விருப்பம் தெரிவித்தார்.
மேலும், செயற்கை நுண்ணறிவு, உயிரிஅறிவியல்,புத்தாக்க ஆற்றல், குறைந்த கார்பன் தொழில்நுட்பம் உள்பட பல துறைகளில் இருநாடுகளும் இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபடவும் அவர் பிரிட்டனை வலியுறுத்தினார்.
இதனிடையே, தமது சீனப் பயணம் குறித்து ஸ்டார்மர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “சீனாவுக்குச் செல்லும் எமது பயணத்தால் பிரிட்டன் மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்றிருந்தேன். அதேபோலவே, இப்போது இந்தப் பயணத்தால் கோடிக்கணக்கான பௌண்ட்ஸ் மதிப்பிலான ஏற்றுமதி மற்றும் முதலீட்டு ஒப்பந்தங்களை கொண்டு வந்துள்ளோம். அதிலும் குறிப்பாக, நமது விஸ்கி தொழில், அதில், வரியைப் பாதியாகக் குறைத்துள்ளது சீனா. இதுவே பிரிட்டனுக்கு நன்மை வரப்போவதைக் குறிக்கும் சிறந்த ஆதாரம்” என்றிருக்கிறார்.
அமெரிக்காவின் அண்மைக் கால நடவடிக்கைகளின் எதிரொலியால், சீனாவுடன் நெருக்கம் காட்டுவதில் மேற்கத்திய நாடுகள் முனைப்பு காட்டுவதைப் பார்க்க முடிகிறது. பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ், தென் கொரிய அதிபர் லீ ஜே ம்யூங்க், பின்லாந்து பிரதமர் பெட்டேரி ஆர்போ, கனடிய பிரதமர் மார்க் கார்னி அகியோர் அண்மையில் சீனாவுக்குச் சுற்றுப்பயணம் சென்றிருந்த்தும் கவனிக்கத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.