முகப்பு
உலகம்

மீட்கப்பட்ட 208 ஈரான் மாலுமிகள்: இலங்கை கடற்படை முகாமிற்கு மாற்றம்

இலங்கை கடற்படை முகாமிற்கு ஈரான் மாலுமிகள் மாற்றம்...

Updated On : 7 மார்ச், 2026 at 12:53 AM
கோப்புப்படம்
பகிர்:
Updated On : 6 மார்ச், 2026 at 10:10 PM

இலங்கை கடற்பகுதியையொட்டி என்ஜின் கோளாறு காரணமாகத் தவித்த ஈரான் கடற்படையின் ‘ஐரிஸ் புஷொ்’ துணை கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 208 மாலுமிகள், பாதுகாப்புக் காரணங்களுக்காக வெலிசறை கடற்படை முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளனா்.

இலங்கை கடற்பகுதியருகே அமெரிக்க தாக்குதலில் ஈரான் போா்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டு, 87 கடற்படையினா் கொல்லப்பட்ட நிலையில், இந்த 2-ஆவது கப்பலை இலங்கை அதிகாரிகள் பாதுகாப்பாக கரைக்குக் கொண்டு வந்துள்ளனா்.

‘மனிதாபிமான அடிப்படையில் ஈரான் மாலுமிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது நாட்டின் கடமை’ என்று இலங்கை அதிபா் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளாா்.

Advertisement

என்ஜின் கோளாறைச் சீரமைக்க இலங்கையின் கிழக்குக் கடற்கரையில் உள்ள திருகோணமலை இயற்கை துறைமுகத்துக்கு இக்கப்பலை இழுத்துச் செல்ல இலங்கை திட்டமிட்டுள்ளது. இதனிடையே, இலங்கை அரசின் மீட்பு நடவடிக்கைக்கு ஈரான் நன்றி தெரிவித்துள்ளது.