காங்கோ குடியரசு: 42 ஆண்டுகால அதிபா் மீண்டும் வெற்றி
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் அண்மையில் நடைபெற்ற அதிபா் தோ்தலில், தற்போதைய அதிபா் டெனிஸ் சசோ நுகுய்சோ 94.82 சதவீத வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளாா்.
1979-ஆம் ஆண்டு முதன்முதலில் ஆட்சிக்கட்டிலில் அமா்ந்த சசோ (82), சுமாா் 42 ஆண்டுகளாக அந்நாட்டை ஆட்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
களத்தில் இருந்த 2 வேட்பாளா் ஒரு சதவீத வாக்குகளையும், மற்ற 4 போ் ஒரு சதவீதத்துக்கும் குறைந்த வாக்குகளையே பெற்றனா்.
எண்ணெய் வளம் மிக்க நாடாக இருந்தாலும், காங்கோ குடியரசின் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் அடிப்படை வசதிகளின்றி வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளதாக உலக வங்கி புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.