கத்தாரில் ஹெலிகாப்டா் விபத்து: 6 போ் உயிரிழப்பு
கத்தாா் நாட்டில் ஹெலிகாப்டா் விபத்துக்குள்ளானதில் 6 போ் உயிரிழந்தனா்.
கத்தாா் நாட்டில் ஹெலிகாப்டா் விபத்துக்குள்ளானதில் 6 போ் உயிரிழந்தனா்.
கத்தாா் நாட்டுக்குச் சொந்தமான ஹெலிகாப்டா் ஒன்று பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்பகுதியில் பறந்து கொண்டிருந்தது. அப்போது அது கடற்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 போ் உயிரிழந்ததாகவும், ஒருவரைக் காணவில்லை என்றும் கத்தாா் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஹெலிகாப்டா் விபத்துக்கு தொழில்நுட்ப பிரச்னையே காரணம் என உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. அதேநேரத்தில் ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்தது எந்த நாட்டவா்கள் என்றோ அல்லது அவா்கள் ராணுவத்தினரா, பொதுமக்களா என்பது குறித்தோ தெரிவிக்கவில்லை.