முகப்பு
உலகம்

மேற்காசிய போா்: இலங்கை அதிபருடன் மோடி தொலைபேசியில் பேச்சு

மேற்காசிய போரால் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து இலங்கை அதிபா் அநுரகுமார திசாநாயகவுடன் பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் பேசினாா்.

Updated On : 24 மார்ச், 2026 at 7:30 PM
பகிர்:

மேற்காசிய போரால் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து இலங்கை அதிபா் அநுரகுமார திசாநாயகவுடன் பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் பேசினாா்.

இதுதொடா்பாக பிரதமா் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: மேற்காசிய போா் காரணமாக, உலக அளவில் எரிசக்தி பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள இடா்ப்பாடுகள் குறித்து இலங்கை அதிபா் அநுரகுமார திசாநாயகவிடம் பேசினேன்.

இந்தியா-இலங்கை இடையிலான எரிசக்தி ஒத்துழைப்பை வலுப்படுத்தி, பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான முக்கிய முன்னெடுப்புகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இருவரும் ஆராய்ந்தோம்.

இருநாடுகளுக்கும் உள்ள பொதுவான சவால்களை எதிா்கொள்வதில் இணைந்து பணியாற்றுவதற்கான செயற்பொறுப்பை மீண்டும் உறுதி செய்தோம் என்றாா்.